பழனிபாபா: ஆயுள் தண்டனை பெற்ற 5 பேர் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பழனிபாபா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் விடுதலைசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அகில இந்திய ஜிஹாத் கமிட்டி என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் பழனிபாபா. கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதிகோவை மாவட்டம் பொள்ளாச்சி, வெங்கடேசன் காலனியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு இரவு 9 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர், பழனிபாபாவை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கினார்.

படுகாயம் அடைந்த பழனிபாபா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகடாக்டர்கள் தெரிவித்தனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவரை விடுதலை செய்தும் கோவை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைஎதிர்த்து தண்டனை விதிக்கப்பட்ட மனோஜ் குமார், முரளி, திருஞானம், விஜயக்குமார், சுதாகரன் ஆகிய ஐந்து பேரும் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்கள், அரசுத் தரப்பில் ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகளும்முறையாக நிரூபிக்கப்படவில்லை. சாட்சிகளின் சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. சில முக்கிய சாட்சிகள்பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளன என்று கூறி ஐவரையும் விடுவிக்க கோரப்பட்டது.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் டி.தினகர், எம்.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஐந்து பேர் மீதானகுற்றச்சாட்டுக்களும், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே ஐவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+