காவலர் தேர்வு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காவலர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், யாருக்குத் தொடர்பிருந்தாலும் அவர்களை உடனடியாகதற்காலிக பணிநீக்கம் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக காவல்துறைக்குக் காவலர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்வுகளில் அடுத்தடுத்து 2 முறை வினாத்தாள்வெளியானது. இதனால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வேலூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், காவலர்தேர்வுக்கான தேர்வில் அடுத்தடுத்து 2 முறை வினாத்தாள் வெளியானதற்கு தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், டிஜிபிஆகியோரின் அக்கறையின்மையே காரணம்.

உள்துறைச் செயலாளர், டிஜிபி போன்ற உயர் அதிகாரிகளிடம் வேலையாட்களாக, டிரைவர்களாக பணியாற்றியவர்கள் மூலமேவினாத்தாள் வெளியாகியிருக்கக் கூடும். எனவே இந்த சம்பவங்களில் உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பிருக்கலாம் என்றசந்தேகம் ஏற்படுகிறது.

எனவே வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.தினகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் எவ்வளவுபெரிய அதிகாரிக்குத் தொடர்பிருந்தாலும் அவரை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய அரசுக்குப் பரிந்துரைசெய்யுங்கள் என்று அரசு வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கூறி உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிஉத்தரவிட்டார்.

பின்னர் விசாரணையை வருகிற 8ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் காவலர் தேர்வு தொடர்பான அனைத்துஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+