தேனி மருத்துவக் கல்லூரி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தரக் கோரி தமிழக அரசு சார்பில்தொடரப்பட்டுள்ள வழக்கில், வருகிற 8ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. நவீனவசதிகளுடன் கூடிய அரசு மருத்துவனையும் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது.இந்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் கல்லூரியில் சில குறைபாடுகள் இருப்பதாக கூறிஅங்கீகாரம் தர மறுத்து விட்டது. இந்தப் பிரச்சினையில் பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும், மத்திய சுகாதாரத் துறைஅமைச்சருமான அன்புமணி ராமதாஸ் அரசியல் செய்வதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
இந் நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில்தமிழக அரசு சார்பில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவில், இந்திய மருத்துவக் கவுன்சில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் 19 குறைபாடுகள் இருப்பதாக கூறியிருந்தது.இவற்றில் 13 குறைபாடுகளை சரி செய்து விட்டோம். மீதமுள்ள குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய தீவிர நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்தவழக்கு நீதிபதி தினகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு விசாரணையை வருகிற 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிஉத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications