கிருஷ்ணா நீர்: ஆந்திர முதல்வருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர்ரெட்டிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திர மாநில முதல்வர்ராஜசேகர் ரெட்டியை நான் ஹைதராபாத் நகரில் சந்தித்து கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி சென்னை நகரின் குடிநீர்த்தேவைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரினேன்.அதன் பின்னர் எனது வேண்டுகோளை ஏற்று ஆந்திர அரசு ஓரளவு நீரைத் திறந்து விட்டது. இருப்பினும் உரிய நீர்கிடைக்கவில்லை. 1983ம் ஆண்டு போடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி சென்னை நகருக்கு ஆண்டுதோறும் ஆந்திரஅரசு 12 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும்.
தற்போது ஆந்திர மாநிலத்தில் பருவ மழை சிறப்பாக பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீசைலம் அணைக்கு பெருமளவு நீர் வந்துகொண்டுள்ளது. அணையில் 201.72 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
எனவே ஸ்ரீசைலம் அணையிலிருந்து போதுமான நீரை சோமசீலா அணைக்குத் திறந்து விடவும், அங்கிருந்து கண்டலேறுவழியாக பூண்டி நீர்த் தேக்கத்திற்கு தண்ணீர் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 3 முக்கிய நீர்த் தேக்கங்களிலும் மிகவும் குறைந்த அளவிலான தண்ணீரே இருப்பு உள்ளது.இதை வைத்துக் கொண்டு 15 நாட்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இதைக் கருத்தில் கெண்டு சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நீரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications