பழனி அருகே தீ விபத்து: 10,000 கோழிகள் சாவு

Subscribe to Oneindia Tamil

பழனி:

பழனி அருகே புளியம்பட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10,000 பிராய்லர் கோழிகள் கருகி இறந்தன.

பழனியைச் சேர்ந்த நாட்டராயன் என்பவருக்கு சொந்தமான கயிறு திரிக்கும் ஆலை புளியம்பட்டியில் உள்ளது. இந்தஆலையில் வெள்ளிக்கிழமை மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட தீப்பொறி ஆலை முழுவதும் வேகமாக பரவியது.

இந்த ஆலையில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த கோழிப் பண்ணைக்கும் பரவியது. இதில் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்தது.அங்கு கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 பிராய்லர் கோழிகள் கருகி இறந்தன.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 25 லட்சத்திற்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+