ஜெயலட்சுமி: 12 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சிபிஐ உத்தரவு
சென்னை:
![]() |
ஜெயலட்சுமியிடன் தொடர்பு வைத்திருந்த 12 போலீஸ் அதிகாரிகள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி தமிழகஅரசுக்கு சிபிஐ பரிந்துரைத்துள்ளது. ஆனால், வழக்கமாக போலீசாரைக் காப்பாற்றுவதிலேயே குறியாய் இருக்கும் தமிழக அரசுஅதைச் செய்யுமா என்று தெரியவில்லை.
ஜெயலட்சுமி வழக்கு தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இதுவரை 6 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் 4 குற்றப் பத்திரிகைகளும், கோவை மற்றும்திருச்சியில் தலா 1 குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன.
மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஜெயலட்சுமி தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன. சிபிஐயின் குற்றப் பத்திரிக்கைகளில் எல்லாம் ஜெயலட்சுமிக்கு எதிராகவே அமைந்துள்ளன.
இந் நிலையில் தமிழக அரசுக்கு சிபிஐயின் தமிழக எஸ்.பி. ஒரு பரிந்துரையை அனுப்பியுள்ளார். 75 பக்கம் கொண்ட அந்தபரிந்துரையில், ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபட்ட 12 போலீஸ் அதிகாரிகள் மீதுஇலாகாபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிபிஐ பரிந்துரைத்துள்ள அந்த அறிக்கையில் ஒரு எஸ்.பி., 2 டிஎஸ்பிகள், 6 இன்ஸ்பெக்டர்கள், 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும்ஒரு தலைமைக் காவலர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சில போலீஸ் அதிகாரிகளின் கிரிமினல்நடவடிக்கைகளும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜெயலட்சுமிக்காக பண மோசடியில் ஈடுபட்டது, கடைநிலை ஊழியர்களை விதிமுறைகளுக்கு மாறாக ஜெயலட்சுமியின் வீட்டில்பணி செய்ய வைத்தது, அரசு எந்திரங்கைள தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் போலீஸ் அதிகாரிகள் மீதுசுமத்தப்பட்டுள்ளன.
ஜெயலட்சுமிக்காக போலீஸ் அதிகாரிகள் போட்டி போட்டுக் கொண்டு சேலைை துவைத்தது முதல் பல எடுபிடி வேலை செய்தஅவலம் குறித்தும் அதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஜெயலட்சுமி வீடு மாறும்போதெல்லாம் அவரது வீட்டுபொருட்களை இடம் மாற்றும் பொறுப்பை போலீஸார் தான் செய்ய வேண்டும் என்று ஒரு உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
அது போல போலீஸ் வாகனங்களில் பல முறை ஜெயலட்சுமியை ஏற்றிச் சென்றுள்ளனர். ஜெயலட்சுமிக்காக பலரிடம் மல்டிலெவல் மார்க்கெட்டிங் தொழிலை போலீஸ் அதிகாரிகள் பலரிடம் செய்து கொடுத்துள்ளனர்.இதில் 2 இன்ஸ்பெக்டர்கள் ஜெயலட்சுமியுடன் பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். ஒரு தலைமைக் காவலர் தனது டூட்டிபுத்தகத்தில் ஜெயலட்சுமிக்காக தவறான தகவல்களை எழுதியுள்ளார். ஒரு சப் இன்ஸ்பெக்டர் தனது மனைவி பெயரில் போலிஆவணம் தயாரித்து ஜெயலட்சுமியுடன் சேர்ந்து மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
காவல் துறையில் இருப்பவர்கள் இவ்வாறு முறைகேடாக செயல்படுவது விதிமுறையை மீறியதாகும். எனவே 12 போலீஸ்அதிகாரிகள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ எஸ்.பி. தமிழக அரசிடம் அளித்துள்ள பரிந்துரைஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சிபிஐயின் பரிந்துரைக்கு முன்னதாகவே இந்த போலீசார் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய தமிழக அரசுஇனியாவது நடவடிக்கை எடுக்குமா என்று தெரியவில்லை.
ரகசிய வாக்குமூலம்:
இதற்கிடையே விபசார வழக்கு தொடர்பாக ஜெயலட்சுமி நேற்று திருநெல்வேலி நீதிமன்றத்தில் பூட்டிய அறைக்குள் 45நிமிடங்கள் நீதிபதி முன் வாக்குமூலம் அளித்தார்.
ஜெயலட்சுமி மீது கடந்த 2002ம் ஆண்டு திருநெல்வேலி டவுண் போலீஸார் விபச்சார வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில்நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது ஜெயலட்சுமி, நீதிபதி சிவதாணு முன்னிலையில்பூட்டிய அறைக்குள் 45 நிமிடங்கள் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
இது குறித்து ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் வெங்கடேசன் கூறுகையில், ஜெயலட்சுமி மீது தொடரப்பட்ட விபச்சார வழக்குஜோடிக்கப்பட்டது என போலீஸ் அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த வழக்கில் போலீஸார் மீது நீதிமன்றம்நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றார்.
இந்த வழக்கில் ஏடிஎஸ்பி ராஜசேகர், இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ், சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், விக்னேஸ்வரன்,தலைமைக் காவலர் கந்தசாமி ஆகியோரும் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications