போர் நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தம் கோரும் சந்திரிகா
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே 2002ம் ஆண்டில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தம்செய்யப்பட வேண்டும் என அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
இலங்கையில் தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க நார்வே தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.நேற்று அதிபர் சந்திரிகாவை நார்வே துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் சந்தித்துப் பேசினார்.முன்னதாக புலிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே சந்திரிகாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க, நார்வே மூலமாக ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். இந்தத் திருத்தங்கள் மூலம் இரு தரப்பிலும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்றுகூறியுள்ளார்.
ஆனால், அவை என்ன மாதிரியான திருத்தங்களாக இருக்கும் என்பதைக் கூறவில்லை.
இதற்கிடையே யாழ்பாணத்தில் சவரத் தொழிலாளி ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில்ஒரு போலீஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டார். அவரை பொது மக்களே அடித்துக் கொன்றனர்.
இது குறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் கூறுகையில்,
யாழ்பாணத்தில் நடந்த அந்த போலீஸ் அதிகாரியின் கொலைச் சம்பவம் துரதிஷ்டவசமானது. மக்கள் வசிக்கும் பகுதியில்ராணுவத்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களைஅவர்கள் மதித்து நடக்க வேண்டும்.
ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமைதியை நிலை நாட்ட நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்பு அளிப்போம்என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications