விழுப்புரம் அருகே பாமக, விஜயகாந்த் ரசிகர்கள் மோதல்
விழுப்புரம்:
சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பாமகவினருக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர்படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள தெளி கிராமத்தில் விஜயகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் மணி மற்றும் மன்ற நிர்வாகிகள் மதுரையில்அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநாடு குறித்த விளம்பரம் எழுதுவதற்காக ஆதிகேசவன் என்பவர் வீட்டு சுவற்றில் வெள்ளைஅடித்தனர்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாம.கவைச் சேர்ந்த தாமோதரன், அருள், கலியமூர்த்தி, சக்கரபாணி கண்ணன் ஆகியோர்சுவரில் விளம்பரம் எழுதக் கூடாது என்று மணியிடம் தகராறு செய்தனர்.
அதற்கு மணி, வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெற்றே வெள்ளையடித்தோம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தபாமகவினர் 5 பேரும் சேர்ந்து விஜயகாந்த் ரசிகர்கள் மணி, கிருஷ்ணமூர்த்தி, பஞ்சநாதன் ஆகியோரை ஆயுதங்களால்தாக்கியுள்ளனர்.
இதையறிந்த விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பஞ்சநாதன், வசந்தா, ரவி, சிவக்குமார், தேவகிருஷ்ணன்,பழனி, குமார் ஆகியோர் சேர்ந்து பாமகவினரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கண்ணன், தனலட்சுமி ஆகியோர்விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் கொடுத்த புகார்களின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் தனித்தனியே வழக்குபதிந்து பாமகவை சேர்ந்த சக்கரபாணி, தாமோதரன், அருள் ஆகியோரையும், விஜயகாந்த் மன்றத்தை சேர்ந்த சிவக்குமார்,பழனி, வசந்தா ஆகியோரையும் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications