7 வீரர்களுடன் கடலில் மூழ்கிய ரஷ்ய நீர் மூழ்கி: மீட்க அமெரிக்கா உதவி

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

ஆழ் கடலில் புதைந்துள்ள ரஷ்யாவின் சிறிய நீர் மூழ்கியில் சிக்கியுள்ள 7 வீரர்களை மீட்க அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான்ஆகிய நாடுகள் கப்பல்களையும், ஆழ்கடல் மீட்புக் கருவிகளையும் அனுப்பி வைத்துள்ளன.

ரஷ்ய நீர் மூழ்கிகள் விபத்தில் சிக்குவது புதிதல்ல. 2000ம் ஆண்டில் 118 வீரர்களுடன் அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிகடலில் மூழ்கியது. அதை வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்தது ரஷ்யா. ரஷ்யாவால் அதை மீட்க முடியாமல் போனதால் 118வீரர்கள் உயிரிழந்தனர்.

இந் நிலையில் சில தினங்களுக்கு முன் பசிபிக் கடலில் பெட்ரோபாவ்லோவிஸ்க் என்ற இடத்துக்கு அருகே பயிற்சியில்ஈடுபட்டிருந்த ஏ.எஸ். 29 ப்ரிஸ் என்ற ஒரு சிறிய ரஷ்ய நீர் மூழ்கி நடுக் கடலில் 109 மீட்டர் ஆழத்தில் தரை தட்டிவிட்டது.

நீர்மூழ்கியின் பின் துடுப்பில் இரும்புக் கம்பி அல்லது இரும்பு வலை சுற்றிக் கொண்டதையடுத்து அது விபத்தில் சிக்கியது.

அதை மீட்க ரஷ்ய கப்பல் படை முயன்றது. ஆனால், முடியாமல் போகவே வழக்கம்போல் உண்மையை மறைக்காமல்அமெரிக்கா, ஜப்பானின் உதவியை ரஷ்யா நாடியுள்ளது.

கடலுக்கடியில் சிக்கியுள்ள அந்த நீர் மூழ்கியில் உள்ள 7 வீரர்களுக்கும் வரும் திங்கள்கிழமை வரை போதுமான உணவும் நீரும்உள்ளது. ஆனால், அதில் ஆக்சிஜனின் அளவு மிகக் குறைவாக உள்ளது.

இதனால் ஆக்சிஜனை அதிகம் பயன்படுத்தாத வகையில் எந்த உடல் இயக்கத்திலும் ஈடுபடாமல், படுத்தபடியே இருக்குமாறுவீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நீர்மூழ்கிக்குள் வெப்ப நிலை 5 டிகிரியாக உள்ளது.

இந் நிலையில் இந்த நீர் மூழ்கியை இரும்புக் கம்பிகளில் இருந்து விடுவிக்க ஆளில்லாமல் இயக்கும் நீர் மூழ்கி ரோபோட்கருவிகளுடன் அமெரிக்க விமானங்கள் ரஷ்யா விரைந்துள்ளன.

அதே போல பிரிட்டனும், ஜப்பானும் ஆழ்கடல் மீட்புக் கருவிகளையும் கடற்படைக் கப்பல்களையும் அனுப்பியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+