டிஸ்கவரி விண்கலம் தரையிறங்க அனுமதி
கேப் கனாவெரல்:
பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களில் மாட்டிய டிஸ்கவரி விண்கலம் பூமிக்குத் திரும்ப அனுமதி தரப்பட்டுள்ளது.
கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து டிஸ்கவரி விண்கலத்தை அமெரிக்காஅனுப்பியது. 7 விண்வெளி வீரர்களுடன் கடந்த இரு வாரங்களுக்கு முன் அந்த விண்கலம் கிளம்பியது.ஆனால், விண்ணுக்குக் கிளம்பிச் சென்றபோது அதிலிருந்த வெப்பம் தாங்கும் தகடுகளில் ஒன்று சிதறி விழுந்தது. மேலும் இருஇடங்களில் தகடுகளுக்கு இடையே பொறுத்தப்பட்ட ரீ-இன்போர்ஸ்ட் கார்பன்-கார்பன் நூலிழைகள் துருத்திக் கொண்டுவெளியே வந்தன.
அந்த நூலிழைகளை டிஸ்கவரியில் இருந்து விண்வெளி வீரர்கள் விண்ணில் நடந்து அகற்றினர்.
ஆனாலும் இந்த பிரச்சனைகளால் விண்கலம் தரையிறங்கும்போது அதற்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சப்பட்டது.அகற்றப்பட்ட இந்த நூலிழைகளால் எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து நாஸா விஞ்ஞானிகள் ஆராய்ந்துவந்தனர்.
ஆராய்ச்சிகளின் முடிவில் விண்கலத்துக்கு பிரச்சனை ஏதும் ஏற்படாது என்ற முடிவுக்கு நாஸா விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.இதையடுத்து டிஸ்கவரி தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை அந்த விண்கலம் தரையிறங்குகிறது. புளோரிடாவின் கென்னடி விண்வெளித் தளத்தில் திங்கள்கிழமை பகலில்டிஸ்கவரி தரையிறங்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications