தர்மபுரி 10 சிம்னி வெடிகுண்டுகள் சிக்கின: நாசவேலைக்கு தீவிரவாதிகள் திட்டம்?
தர்மபுரி:
தர்மபுரி அருகே சிம்னி விளக்குகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 10 வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலுள்ள குண்டலப்பட்டி அதியமான் ஆட்டோநகர் பகுதியில் ஒரு முட்புதரின்அருகில் பிளாஸ்டிக் பையில் கிடந்த இந்த வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றினர்.இது குறித்து தர்மபுரி மாவட்ட எஸ்.பி. ஜெயராம் நிருபர்களிடம் கூறுகையில், நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 3மணியளவில் செல்போனில் பேசிய ஒருவர், குண்டலப்பட்டி ஆட்டோ நகரில் ஒரி பிளாஸ்டிக் பையில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.
உடனடியாக எனது தலைமையில் டி.எஸ்.பி., மகேந்திரன், நக்ஸல் ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீஸார்,வெடிகுண்டுகளை கண்டு பிடிக்கும் மோப்ப நாய் வீனஸுடன் குண்டல்பட்டி விரைந்தோம்.
ஒரு முள் செடியின் மீது பிளாஸ்டிக் சாக்குப்பையில் சிம்னி விளக்குகள் வடிவிலான 10 வெடிகுண்டுகள் இருந்ததைக்கண்டுபிடித்தோம். 3 இன்ச் உயரத்தில் இருந்த சிம்னி விளக்கில் ப்யூஸ் வயருடன் டெட்டனேட்டர் இணைக்கப்பட்டிருந்தது.
சிம்னி விளக்கின் ஒரு புறத்தில் காப்பர் கம்பியுடன், டிராயர் பட்டன் இணைக்கப்பட்டு மற்றொரு புறத்தில் மூன்று தீக்குச்சிசொருகப்பட்டிருந்தது. தீக்குச்சியை மறைக்கும் விதத்தில் ஒரு தகடு பொருத்தப்பட்டு, பட்னை இழுத்தால் தீக்குச்சி அசைந்துஅதில் வைக்கப்பட்டுள்ள கந்தகம் தடவப்பட்ட அட்டையுடன் உரசி தீப்பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
தீப்பற்றினால், ப்யூஸ் ஒயர் தீப்பிடித்து டெட்டனேட்டர் வெடித்து, சிம்னி விளக்கில் உள்ள வெடிமருந்து வெடிக்கும் தன்மையில்நிரப்பப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து, அந்த வெடிகுண்டுகள் அனைத்தையும் நக்ஸல் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்தோம்.நாசவேலையில் ஈடுபடும் நோக்கில் சிம்னி விளக்கு வெடிகுண்டை தயாரித்துள்ளதாக தெரிகிறது.
அதை எங்கு வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர், யார், யாருக்கு தொடர்பு, இதில், நக்ஸல்கள் பங்கு என்னஎன்பது குறித்து விசாரிப்பதற்காக டி.எஸ்.பி., மகேந்திரன் தலைமையில் நக்ஸல் பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில், சேலம் க்யூபிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ராஜா காளீஸ்வரன், தர்மபுரி க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சேகர், மதிகோன் பாளையம் இன்ஸ்பெக்டர்சேகர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சிம்னி விளக்கு வெடிகுண்டில் இருக்கும் வெடிமருந்தின் தன்மை புரியவில்லை. இதற்காக சென்னையில் இருந்து வெடிமருந்துநிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தான் வெடிமருந்தின் தன்மை என்ன என்பது தெரிய வரும்என்றார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் டிஐஜி தமிழ்செல்வன் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார். இதனால்,தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications