தமிழக காங்கிரஸில் கோஷ்டிப் பூசலுக்கு இடமில்லை: வாசன்
சென்னை:
தமிழக காங்கிரஸில் கோஷ்டிப் பூசலுக்கு இடமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சென்னையில் கூறினார்.
தமிழக காங்கிரஸின் தலைவராக ஜி.கே.வாசன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பிறகு முதன் முதலாக கட்சியின் தலைமைஅலுவலகமான சத்யமூர்த்தி பவனுக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக காங்கிரஸ் தலைவராக என்னை மீண்டும்நியமனம் செய்த சோனியாவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழக காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை கோஷ்டிப்பூசலுக்கு இடம் கிடையாது. காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்துதரப்பினரையும் கலந்து பேசுவேன். அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையை உண்டாக்குவேன்.
சொந்த விருப்பு, வெறுப்பு, கோஷ்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் எனது கட்சிப் பணிகள் இருக்கும். தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள்விரோத ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். அதற்காக காங்கிரஸ் கட்சி மேலும் சிறப்பாக பணியாற்றும்.
ஜனநாயக முற்போக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி கிடைத்தது போல் அடுத்தஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் அதே போல வெற்றி கிடைக்கும்.
மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதியும் ஒதுக்கியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழகத்தை வளர்ச்சிபாதைக்கு எடுத்து செல்லாமல் முட்டுக்கட்டை போடும் முயற்சியில் முதல்வர் ஜெயலலிதா ஈடுபடுகிறார்.
ஒரு பக்கம் தமிழகத்திற்கு நலத்திட்டக் கோரிக்கைகள் வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். இன்னொரு பக்கம் சேது சமுத்திர கால்வாய் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போட்டுஇரட்டை வேடம் போடுகிறார் ஜெயலலிதா என்றார் வாசன்.
முன்னதாக 2வது முறையாக தலைவராக நியமிக்கப்பட்ட வாசன், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த போது மேளதாளங்களுடன்வாசனை கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர். பட்டாசுகளும் வெடித்தனர். தியாகிகள் அரங்கத்தில் வெளியூரிலிருந்து வந்ததொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று வாசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications