தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் டிஐஜிக்கள் மற்றும்எஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிக்கிய ஏடிஜிபி அமித் வர்மா இன்னும் காத்திருப்போர் பட்டியலிலேயேவைக்கப்பட்டுள்ளார்.ஐபிஎஸ் அந்தஸ்திலுள்ள 15 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 6டிஐஜிகள் ஐஜிகளாகவும், 9 எஸ்பிகள் டிஐஜிகளாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
டிஐஜிக்களான எம்.எஸ். ஜாபர் சேட், சஞ்சீவ் குமார், ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ் குமார் ஜா மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் ஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
எஸ்.பிக்களான அம்ரேஷ் பூஜாரி, எம். ரவி, டாக்டர். ஜெயந்த் முரளி, கருணா சாகர், எம்.என். மஞ்சுநாதா, கிறிஸ்டோபர்நெல்சன், பி. சிவனாண்டி, குணசீலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் டிஐஜிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ஜாபர் சேட் போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஐஜியாகவும், சஞ்சீவ் குமார் சிஐடி நுண்ணறிவுப் பிரிவு ஐஜியாகவும்நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்செல்வன் திருச்சி மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர மாநிலம் முழுவதும் பல்வேறு டிஐஜிக்கள் மற்றும் எஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையே முத்திரைத் தாள்மோசடி வழக்கில் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஏடிஜிபி அமித் வர்மாவுக்கு வேறு பதவி எதுவும்வழங்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications