சரிந்து வரும் தமிழக பொருளாதாரம்: வெள்ளை அறிக்கை தேவை-கருணாநிதி
சென்னை:
மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் தமிழக அரசின் பொருளாதார அம்சங்கள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த மாதம் நடந்த சமச்சீர் வளர்ச்சித் திட்ட தொடக்கவிழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகம் சமச்சீர் பொருளாதார வளர்ச்சியை எட்ட தனது ஆட்சியின் பல்வேறுநடவடிக்கைகள் தான் காரணம் என்று கூறியுள்ளார்.அவர் கூறிய புள்ளி விவரங்கள் ஒரு சார்பான நிலையில் தயாரிக்கப்பட்டவையாகும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிதிடீரென ஏற்படாது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக 1969-71, 71-76, 89-91, 1996-2001 ஆகிய ஆண்டுகளில் இருந்த திமுக அரசுஎடுத்த முயற்சிகள் மற்றும் செயல் திட்டங்கள் தான் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றன.
1996ல் மாநில நிகரப் பொருள் உற்பத்தி அளவு மதிப்பு ரூ. 59,861 கோடியாக இருந்தது. 2000-2001ல் இது ரூ. 80, 590கோடியாக உயர்ந்தது.
ஜெயலலிதா ஆட்சி ஏற்பட்ட பிறகு 2003-2004ல் இது ரூ. 85,573 கோடியானது. அவருடைய ஆட்சியில் ரூ. 4,984 கோடி தான்வளர்ச்சி ஏற்பட்டது. திமுக ஆட்சியில் ரூ. 20, 729 கோடி வளர்ச்சி இருந்தது.
2000-2001ல் தமிழகத்தில் தனி நபர் வருமானம் இந்தியாவில் 4வது இடத்தில் இருந்தது. 2002-2003ல் இது 7வது இடத்திற்குதள்ளப்பட்டு விட்டது என மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
இதே போல விவசாய உற்பத்தியும் கிட்டத்தட்ட பாதியளவு குறைந்து விட்டது. மாவட்டங்களுக்கு இடையில் வளர்ச்சிவிகிதத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக விவசாயத் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள தேக்க நிலையையும், சரிந்து வரும் பொருளாதாரக்கூறுகளையும், சட்டப் பேரவை உறுப்பினர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ள வசதியாக ஒரு வெள்ளை அறிக்கையைவெளியிட வேண்டும் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications