ரஷ்ய நீர் மூழ்கியை மீட்டது பிரிட்டன்: 7 வீரர்கள் உயிர் பிழைத்தனர்
மாஸ்கோ:
7 வீரர்களுடன் ஆழ் கடலில் இரும்பு வலையில் சிக்கிய ரஷ்யாவின் சிறிய நீர் மூழ்கியை பிரிட்டன் அனுப்பிய ஆளில்லாரோபோட் கருவி மீட்டது. இதையடுத்து 7 வீரர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
கடந்த வாரம் பசிபிக் கடலில் பெட்ரோபாவ்லோவிஸ்க் என்ற இடத்துக்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஏ.எஸ். 29 ப்ரிஸ்என்ற சிறிய ரஷ்ய நீர் மூழ்கி நடுக் கடலில் 109 மீட்டர் ஆழத்தில் இரும்பு வலையில் சிக்கி தரை தட்டியது.நீர்மூழ்கியின் பின் துடுப்பில் இரும்புக் கம்பி சுற்றிக் கொண்டதையடுத்து அது மேலே வர முடியாமல் சிக்கயது. இதையடுத்துஅதை மேலே கொண்டு வர ரஷ்ய கடற்படை எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியை ரஷ்யா கோரியது. அந் நாடுகள் கப்பல்களையும்,ஆழ்கடல் மீட்புக் கருவிகளை விமானங்களிலும் அனுப்பி வைத்தன.
இதில் முதலில் வந்து சேர்ந்த பிரிட்டனின் ஆளில்லாமல் இயங்கும் ஆழ்கடல் ரோபோட் கருவியான ஸ்கார்பியோ, நேற்று ரஷ்யநீர்மூழ்கியை சுற்றியிருந்த இரும்பு வலையை வெட்டி நீர் மூழ்கியை மீட்டது. இதையடுத்து அதிலிருந்த 7 வீரர்களும் உயிருடன்மீட்கப்பட்டனர்.
இன்று பிற்பகல் வரையே அந்த வீரர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் நீர்மூழ்தியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய நீர் மூழ்கிகள் விபத்தில் சிக்குவது புதிதல்ல. 2000ம் ஆண்டில் 118 வீரர்களுடன் அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிகடலில் மூழ்கியது. அதை வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்தது ரஷ்யா. ரஷ்யாவால் அதை மீட்க முடியாமல் போனதால் 118வீரர்கள் உயிரிழந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications