சென்னை திரையரங்குகளில் வெடிகுண்டு மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் உள்ள நான்கு திரையரங்குகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்ததால் பரபரப்புஏற்பட்டது.
சென்னை நகரில் உள்ள தி.நகர் கிருஷ்ணவேணி, அண்ணா சாலை தேவி, புரசைவாக்கம் மோட்சம் மற்றும் இன்னொருதிரையரங்கு உள்பட 4 திரையரங்குகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மாநகர போலீஸாருக்குத் தகவல் வந்தது.இதையடுத்து போலீஸ் படை அங்கு விரைந்தது. வெடிகுண்டுகளை கண்டறியும் கருவி, மோப்ப நாய்களுடன் வந்த போலீஸ்படையினர், படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பீதி ஏற்பட்டு விடாதபடி, மிகவும் ரகசியமாக திரையரங்கின் பல்வேறுபகுதிகளிலும் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகளின் போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்ததகவல் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு புரளியைக் கிளப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications