இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் காந்தி சிங் கூறுகையில், இந்தியாவில்21 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கண்டறிந்துள்ளது.இது தொடர்பாக அந்தந்த மாநில கல்வித் துறை செயலாளர்களுக்கு யுஜிசி கடிதம் எழுதியுள்ளது. அதில் போலிபல்கலைக்கழகங்களை கண்டுபிடித்து அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுஎன்றார்.
அமைச்சர் காந்தி மேலும் கூறுகையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணி புரியும் பெண்கள் மீதான பாலியல்தாக்குதல் கடந்த 5 வருடங்களில் மிகவும் அதிகரித்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications