3 நாட்களில் அபராதத்தைக் கட்ட அப்பு மனைவிக்கு உத்தரவு
சென்னை:
நீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களைத் தந்ததாக அப்புவின் மனைவி நிர்மலா மீது அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ள புகார்உண்மையானது என்று தெரியவந்ததால், அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட ரூ. 10,000 அபராதத்தை உறுதி செய்த சென்னைஉயர்நீதிமன்றம் 3 நாட்களுக்குள் அபராதத் தொகையைக் கட்டுமாறு நிர்மலாவுக்கு உத்தரவிட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் அப்புவைப் பார்க்க போலீஸாரும், சிறைநிர்வாகமும் அனுமதிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிர்மலா தெரிவித்திருந்தார்.ஆனால் அரசுத் தரப்பு இதை மறுத்தது. மேலும், அப்புவை நிர்மலா பலமுறை சிறைக்குச் சென்று பார்த்தது தொடர்பானஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தாக்கல் செய்தது. இந்த ஆவணங்களை சரி பார்த்த உயர்நீதிமன்றம், நிர்மலாபொய் சொன்னதை உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து தவறான தகவல்களைத் தந்ததற்காக நிர்மலாவுக்கு தனி நீதிபதி பி.டி.தினகரன் ரூ.10,000 அபராதம் விதித்துஉத்தரவிட்டார். இதை எதிர்த்து நிர்மலா மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் என்.தினகர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர்அடங்கிய பெஞ்ச், உயர்நீதிமன்றத்திற்கு நிர்மலா பொய்யான தகவல்களைக் கூறியுள்ளது ஆவணங்கள் மூலம் உறுதியாகத்தெரிய வருகிறது.
எனவே இதற்காக விதிக்கப்பட்ட அபராதம் உறுதி செய்யப்படுகிறது. இந்தத் தொகையை இன்னும் 3 நாட்களுக்குள் நிர்மலாகட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications