அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை:
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு வங்கிககள் மூலம் சம்பளம் வழங்கும் முறை அடுத்த மாதம் முதல் அமலுக்குவருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 12, 33,000 அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களுக்கான சம்பளம் அந்தந்த அலுவலகங்கள்மூலமாகவோ அல்லது அரசு கருவூலகங்கள் மூலமாகவோ வழங்கப்பட்டு வந்தது.இந் நிலையில் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட சில வங்கிகள் மூலம் சம்பளம் பெறும்வசதி ஏற்படுத்தப்பட்டது. சம்பள தினத்தன்று அவர்களுக்கு உரிய சம்பளம் வங்கிகளில் வரவு வைக்கப்படும். ஏடிஎம் கார்டுஉள்ளவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது இந்த முறையை தமிழகம் முழுவதும் அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களது சம்பளத்தை வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சம்பளப்பணம் வரவு வைக்கப்படும். அந்த வங்கிகளில் ஏடிஎம் வசதி இருந்தால் அந்தவசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பான சுற்றறிக்கை அர சு கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த புதிய முறைக்கு அரசு ஊழியர் சங்கத் தலைவர் சூரியமூர்த்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications