என்கவுண்டரில் ரவுடி கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
சேலம்:
சேலத்தில் ரவுடியை போலீஸார் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொன்றது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் அருகே உள்ள நயினார்கவுண்டன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த பிரபல ரவுடி கர்ணன் என்பவர் கடந்த ஆண்டு சேலம்மாவட்ட போலீஸாரால் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது போலீஸாரை தாக்கி விட்டுத் தப்பிச் செல்லும்போது நடந்த மோதலில் கர்ணன் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இந் நிலையில் தனது கணவர் அப்போதைய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்மாணிக்கவேலுவின் தூண்டுதலின்பேரில் வேண்டும் என்றே சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறி கர்ணனின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.தினகரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸார் இந்த சம்பவம்தொடர்பாக உரிய விசாரணை நடத்தவில்லை. அவர்களது நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. கூறும் காரணங்களும்பொருத்தமாக இல்லை.
எனவே இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறேன். இதுகுறித்து 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்திநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தனது கணவர் இறப்புக்கு இழப்பீடு தர வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை உரியமுறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications