தமிழகத்திற்கு 80 டிஎம்சி கொடுத்தாச்சு!: கூறுகிறார் தரம்சிங்!
மைசூர்:
தமிழகத்திற்கு காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை (67 டிஎம்சி) விட அதிக அளவு (80 டிஎம்சி)நீரை கொடுத்திருக்கிறோம் என்று கர்நாடக முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார்.
மைசூர் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பினால் மாநில முதல்வர், அமைச்சர்கள் சென்று காவிரித் தாய்க்குப் பூஜை செய்வதுவழக்கம். அந்த வகையில் தற்போதும் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியுள்ளதால் தரம்சிங், அவரது மனைவி பிரேமாவதிதரம்சிங், அமைச்சர்கள், துணை முதல்வர் எம்.பி. பிரகாஷ் உள்ளிட்டோர் அங்கு சென்று பூஜை செய்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் தரம்சிங் பேசுகையில், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி இந்தக் கால கட்டத்தில்தமிழகத்திற்கு 67 டிஎம்சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை விட கூடுதலாகவே, அதாவது 80 டிஎம்சிதண்ணீரை கர்நாடகம் வழங்கியுள்ளது.
நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி வாராந்திர, மாதாந்திர அடிப்படையில் வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் வழங்கிவிட்டது என்றார் தரம்சிங்.
(அணை நிரம்பிவிட்டதால் உபரி நீரைத் தான் தமிழகத்தக்கு திறந்துவிட்டது கர்நாடகம். காவிரி நடுவர் மன்றத்தின்உத்தரவுப்படி ஒவ்வொரு மாதமும் இவ்வளவு நீர் என்று தந்திருக்க வேண்டும். அதைச் செய்யாததால் தமிழகத்தில் விவசாயப்பணிகளை திட்டமிட்டுத் தொடங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)
கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்தக் கொள்ளளவு 124.80 அடியாகும். தற்போது அணையின் நீர் இருப்பு 124.55 அடியாகஉள்ளது.
வீராணத்திற்குப் பாயும் காவிரி நீர்:
இதற்கிடையே, காவிரியிலிருந்து வரும் நீர் வீராணம் ஏரிக்கு அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் சென்னை நகரின்குடிநீர்த் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் இருந்து வந்த நீர் காரணமாக மேட்டூர் அணை கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில்அபரிமிதமான நீர் வந்து கொண்டுள்ளது. இந்த நீரின் ஒரு பகுதி காவிரிப் பாசனப் பகுதியின் கடைமடை பகுதியான வீராணம்ஏரிக்கு வந்து கொண்டுள்ளது.
கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரின் ஒரு பகுதி வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமையன்று வீராணம் ஏரிக்கு 1,600 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதனால் ஏரியின் நீர் இருப்பு 240 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புதியவீராணம் திட்டத்திற்கு மேலும் பலம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தற்போது வீராணம் ஏரியிலிருந்து சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக 50 கன அடி நீர் எடுக்கப்படுகிறது.வீராணத்திற்கு அதிக அளவில் காவிரி நீர் வருவதால், இதை 100 கன அடியாக அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications