அயோத்தி: தீவிரவாதிகளின் சமாதியை தோண்டிய சாதுக்கள்
பைசாபாத்:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி- ராமர்கோவில் வளாகத்தைத் தாக்க முயன்று சுட்டுக் கொல்லப்பட்ட 5தீவிரவாதிகளின் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுக்க இந்து அமைப்பைச் சேர்ந்த சாதுக்கள் முயன்றனர். அவர்களைஅதிகாரிகள் தடுத்துவிட்டனர்.
சமீபத்தில் நடந்த அயோத்தி தாக்குதலை பாதுகாப்புப் படையினர் முறியடித்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இவர்களதுஉடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பின் அயோத்தியில் உள்ள தர்கி தாகியா என்ற இடத்தில் புதைக்கப்பட்டுள்ளன.இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரித்து தனியாக பூர்வாஞ்சல் மாநிலம் கோரி வரும் பூர்வாஞ்சல் ராஜ்ய சங்கர்ஷசமிதி அமைப்பைச் சேர்ந்த சாதுக்கள் திடீரென இந்த சமாதிகளை தோண்டத் தொடங்கினர்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், ஜின்னாவை வாழ்த்திப் பேசிய அத்வானி ஆகியோருக்கு எதிராக கோஷம்எழுப்பியபடியே சமாதிகளை தோண்டினர்.
இதையடுத்து அதிகாரிகளும், பாதுகாப்புப் படையினரும், காவல் துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
சமாதிகளைத் தோண்டிய சாதுக்களை தடுத்து நிறுத்தினர். ஆனால், உடல்களை தோண்டியெடுத்து கோவில் நகரான அயோத்திக்குவெளியே புதைக்க வேண்டும் என சாதுக்கள் கூறினர்.
இந்தக் கோரிக்கைகுறித்துப் பரிசீலிப்பதாகவும், கோரிக்கையை மனுவாக எழுதித் தருமாறும் கூறியதையடுத்து தோண்டும்வேலையை விட்டுவிட்டு சாதுக்கள் கலைந்து சென்றனர்.
சமாதிகளை உடனே அயோத்திக்கு வெளியே கொண்டு செல்லாவிட்டால் பெரும போராட்டத்தில் ஈடுபட்டு, உடல்களைநாங்களே தோண்டியே வெளியே எடுப்போம் என சாதுக்கள் எச்சரித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications