சிபிஐ விசாரணை: சதுர்வேதியின் மனு தள்ளுபடி
சென்னை:
தன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிய சதுர்வேதி சாமியாரின் மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை தொழிலதிபர் சுரேஷின் மனைவி மற்றும் மகளைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்தது, பண மோசடி செய்ததுஉள்ளிட்ட பல்வேறு புகார்களின் பேரில் சதுர்வேதி கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தின் கீழும் அவர் கைதுசெய்யப்பட்டார்.இந் நிலையில் தன் மீதான வழக்குகளை தமிழக போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது பொய்யான வழக்குகள் போடப்பட்டுள்ளது.
எனவே என் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சதுர்வேதி சார்பில் சமீபத்தில்உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன் இன்று சதுர்வேதியின்மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மனுதாரர் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற முடியாது. குற்றம் சாட்டப்பட்டவரே, தனது வழக்குகளை யார் விசாரிக்கவேண்டும் என்று உரிமை கோர முடியாது என ஒரு வழக்கில் முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்அடிப்படையில் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications