திமுக-விஜயகாந்த் ரசிகர்கள் இடையே பெரும் மோதல்
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திமுக தொண்டர்களுக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையே பெரும் மோதல்ஏற்பட்டது. இதனால் காரைக்குடியில் பதட்டம் நிலவுகிறது.
விஜயகாந்த் தனது புதிய அரசியல் கட்சி அறிவிப்பை மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள ரசிகர் மன்றமாநாட்டில் வெளியிடுகிறார். மாநாடு தொடர்பான வேலைகளில் ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதேபோன்ற சுவர் விளம்பரங்கள் காரைக்குடியிலும்வரையப்பட்டுள்ளன. செக்காலை, ஐந்து விளக்கு, கருவூலம் ஆகிய பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டிருந்தன.
இந் நிலையில் திமுகவைச் சேர்ந்தவர்கள், வருகிற 27ம் தேதி வேலூரில் நடைபெறவுள்ள மண்டல மாநாடு தொடர்பானவிளம்பரத்தை, விஜயகாந்த் ரசிகர்கள் வரைந்து வைத்திருந்த விளம்பரத்தை அழித்து விட்டு வரைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிய வந்ததும் விஜயகாந்த் ரசிகர்கள் அங்கு திரண்டு வந்தனர். திமுகவினருக்கும், ரசிகர்களுக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது. இதுமுற்றி இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். அவர்களுக்கிடையே பெரும் மோதல் மூளும்சூழ்நிலை உருவானது.
அதற்குள் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து போகச்செய்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications