இளைஞர் காங். தலைவர் மீது பரபரப்பு புகார்
சென்னை:
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகனுமான டாக்டர் விஷ்ணு பிரசாத் மீதுகொலை மிரட்டல் புகார் எழுந்துள்ளது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் விஷ்ணு பிரசாத். ராமதாஸின் மருமகனான இவர் மீது இளைஞர் காங்கிரஸ்துணைத் தலைவர் காண்டீபன் பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை சந்தித்துகாண்டீபன் கொடுத்த புகார் காங்கிரஸ் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.தனது புகாரில் காண்டீபன் கூறியுள்ளதாவது: எனக்கும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுபிரசாத்துக்கும் அரசியல் ரீதியாகஒத்துவரவில்லை. இதனால் கோபமடைந்த அவர், தனக்கு உடன்பாடாக செயல்படவில்லை என்றால் கடுமையானவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். குண்டர்களை வைத்துத் தீர்த்துக் கட்டி விடுவேன் என்று மிரட்டினார்.
இந் நிலையில் கடந்த மாதம் பெங்களூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினருக்கான பயிற்சி முகாம் நடந்தது. அப்போதுவிஷ்ணுபிரசாத் தூண்டுதலின் பேரில் சில குண்டர்கள் என்னை அணுகி, விஷ்ணுபிரசாத்துடன் சமாதானமாகப் போகும்படியும்,இல்லாவிட்டால் உயிர் தப்பாது என்றும் மிரட்டினர். இவற்றையெல்லாம் விஷ்ணுபிரசாத் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
சென்னைக்குத் திரும்பிய பிறகும் தொலைபேசி மூலம் விஷ்ணுபிரசாத்துடன் அமைதியாகப் போகும்படி எனக்கு மிரட்டல்கள்வந்து கொண்டுள்ளன. ராஜு என்பவரும், சில அடியாட்களும் என்னைத் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்.
எனது உயிருக்கு விஷ்ணுபிரசாத் மற்றும் அவரது அடியாட்களால் மிரட்டல் ஏற்பட்டுள்ளது. எனவே விஷ்ணுபிரசாத் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் புகாரை வடபழனி காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ள நடராஜ்உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் தான் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தியை, சத்தியமூர்த்தி பவனில் வைத்துசரமாரியாக அடித்தனர், வீடு புகுந்தும் தாக்கினர்.
அந்த அமளி முடிவதற்குள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுபிரசாத் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது காங்கிரஸ்கட்சிக்குள் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications