ஜெ சொத்து குவிப்பு: விசாரணை 26க்கு ஒத்திவைப்பு
பெங்களூர்:
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு, லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கு ஆகியவற்றை இணைத்துவிசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால், விசாரணையை பெங்களூர் நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 26ம்தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது.
வருமானத்தை மீறி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், சுதாகரன் ஆகிய 5 பேரும் ரூ. 65 கோடி சொத்து சேர்த்ததுதொடர்பாகவும் லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பாகவும் திமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது.வழக்கு விசாரணையை பல வகைகளிலும் இழுத்தடித்தார் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா. இதையடுத்து உச்ச நீதிமன்றம்,ஜெயலலிதா தரப்புக்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து வழக்கை பெங்களூர் தனி நீதிமன்றத்துக்கு மாற்றியது.
நீண்ட கால தாமத்துக்குப் பின் பெங்களூரில் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. ஆனால், இரு வழக்குகளையும் ஒன்றாகஇணைக்கக் கோரி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அதை பெங்களூர் தனி நீதிமன்றம் ஏற்றது.
இதையடுத்து வழக்குகளை மேலும் இழுத்தடிக்கும் நோக்கில் மனுக்கள் மேல் மனுக்கள் போட்டு வருகிறார் ஜெயலலிதா.
இந் நிலையில் வழக்கு போகும் போக்கில் ஏற்பட்டுள்ள திருப்பங்களால் அதிர்ந்து போன திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர்அன்பகழன் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்குஆகியவற்றை ஒரே வழக்காக இணைத்து விசாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடக்கும்இரு வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க கடந்த 5ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.
இந் நிலையில் பெங்களூர் நீதிமன்றத்தில் இந்த இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்புவழக்கறிஞர் ஆச்சாரியாவிடம், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை குறித்து உங்களுக்கு முறையான தகவல்வந்ததா என நீதிபதி பச்சேபுரே கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஆச்சாரியா, சென்னை ஊழல் தடுப்புத்துறை இயக்குனரிடம் இருந்து இது குறித்து எழுத்துப்பூர்வமாகதகவல் வந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல் எனக்கு வரவில்லை என்றார்.
அப்போது பேசிய ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி, அந்தத் தடை குறித்து பத்திரிக்கைகள் மூலமாகத் தான் நான் அறிந்துகொண்டேன் என்றார்.
இந் நிலையில் தனக்கு எதிராக வழக்குத் தொடர கவர்னர் அனுமதி தந்ததற்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவைசென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட உண்மையை மறைத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் இங்கு (தனிநீதிமன்றத்தில்) மனு தாக்கல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா ஒரு மனு தாக்கல் செய்தார்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த ஜோதி, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இப்படிப்பட்ட மனுவை அரசுத் தரப்புதாக்கல் செய்துள்ளது என்றார்.
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், சுதாகரன் ஆகியோர் நேரில்ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி ஜோதி ஒரு மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அடுத்தகட்ட விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications