சென்னையில் கம்பன் விழா
சென்னை:
சென்னை கம்பன் கழகம் சார்பில் வருகிற 12ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கம்பன் விழா நடத்தப்படும் என கம்பன் கழகதலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், சென்னை கம்பன் கழகம் சார்பில் ஆண்டுதோறும் கம்பன் விழா நடத்தப்படுகிறது. 31வதுஆண்டாக, இந்த ஆண்டு வருகிற 12ம் தேதி முதல் 3 நாட்களுக்கு, கம்பன் விழா நடைபெறுகிறது.ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் விழா நடைபெறும். 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு விழா தொடங்கும். கம்பன்கழகத்தை நிறுவிய முன்னாள் நீதிபதி மு.மு.இஸ்மாயில் உருவப் படத்தை, முன்னாள் குஜராத் மாநில உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி கோகுலகிருஷ்ணன் திறந்து வைப்பார்.
அதன் பின்னர் கம்பராமாயணத்தில் சகோதரத்துவம் என்ற நூலை ஆர். வீரமணி வெளியிடுகிறார். பா.நமச்சிவாயம்,எஸ்.என்.குப்புசாமி, தமிழண்ணல், சிவ. திருச்சிற்றம்பலம், வடிவேல், மாசிலாமணி, திருப்பூர் கிருஷ்ணன், எஸ்.எம்.கமால்ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 75,000 விருதுப் பணமாக வழங்கப்படும். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 48 மாணவ,மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்சிறப்புரையாற்றுகிறார்.
13ம் தேதி நடைபெறும் விழாவில் கரு.பழனியப்பன் தலைமையில் இளைஞர் பட்டிமன்றம் நடக்கிறது. மாலை 5 மணிக்குகருத்தரங்கம் நடைபெறுகிறது. 14ம் தேதி காலை கவிஞர் மு.மேத்தா தலைமையில் கவிதை அரங்கம் நடைபெறுகிறது. மாலை5 மணிக்கு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது என்றார் ஆர்.எம்.வீரப்பன்.
இந்த ஆண்டுக்கான விழாவுக்கு கம்பன் காட்டும் விழுமங்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் வீரப்பன் தெரிவித்தார்.பேட்டியின் போது துணைத் தலைவர் க.ராசாராம், ஏவி.எம்.சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications