ஆக.15: இமாம் அலி கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுதந்திர தினம் நெருங்கி வருவதையொட்டி, நீண்ட காலமாக தலைமறைவாக இருக்கும் வெடிகுண்டு வைப்பதில் திறமைவாய்ந்த தீவிரவாதிகளான இமாம் அலியின் கூட்டாளி அபுபக்கர் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர போலீஸ் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்தவிதஅசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காதபடி ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வரலாற்றுச் சின்னங்கள்,கோவில்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள முக்கியமான 9 தீவிரவாதிகளைத் தேடிப் பிடிக்கவும் தற்போதுபோலீஸார் தீவிர முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளனர். மொத்தம் 10 பேர் தலைமறைவாக இருந்து வந்தனர்.

அவர்களில் மைதீன் என்பவரை சமீபத்தில் நெல்லை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். இவருக்கு கோவை குண்டு வெடிப்புசம்பவத்தில் தொடர்பு உள்ளது. தலைமறைவாக உள்ள மற்ற 9 பேரையும் பிடிக்க தற்போது முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் வெடிகுண்டுகள் வைப்பதில் தேர்ந்தவர்கள். கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் இவர்களுக்குத்தொடர்பு உள்ளது. அத்தோடு மேலும் சில சம்பவங்களிலும் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது.

தலைமறைவாக உள்ளவர்களில் அபுபக்கர் என்ற சித்திக் என்பவர் தான் மிகப் பயங்கரமானவர் என்று போலீஸ் தரப்பில்கூறப்படுகிறது. நாகூரைச் சேர்ந்த இவர், இமாம் அலியின் முக்கியக் கூட்டாளி ஆவார்.

இவர் தவிர கோவையைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், டெய்லர் ராஜா, அஷ்ரப் அலி, திருநெல்வேலி மேலப்பாளையத்தைச்சேர்ந்த ரசூல் முகைதீன், முகம்மது அலி யூனஸ், கேரளாவைச் சேர்ந்த ரஷீத், குஞ்சு முகம்மது, வாணியம்பாடியைச் சேர்ந்தமுஷ்டாக் அகமது ஆகியோர் தலைமறைவாக உள்ள மற்றவர்கள் ஆவர்.

இவர்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையர்கள் என்பதால் தலைமறைவாக உள்ள 9 பேரின் தலைக்கும் ரூ.2லட்சம் விலை வைக்கப்பட்டுள்ளது. அபுபக்கர், காஷ்மீர் தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.வெடிகுண்டுகளைத் தயாரிப்பதிலும், அவற்றை வெடிக்கச் செய்வதிலும் கை தேர்ந்தவர்.

சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்று மத்திய உளவுப் பிரிவு போலீஸார் எச்சரித்துள்ளநிலையில், தலைமறைவாக உள்ள இந்த தீவிரவாதிகளைப் பிடிக்க தமிழக போலீஸார் புதிய முயற்சிகளைமேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+