தொகுதி மறு சீரமைப்பு: ஜி.கே.வாசன் வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக மக்களிடையே நிலவும் சந்தேகங்களை போக்கும் வகையில் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும்,அச்சங்களும் ஏற்பட்டுள்ளன. இதைத் தவிர்க்கும் வகையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.இதன் மூலம் கொந்தளிப்பான சூழ்நிலையையும், போராட்ட நிலையையும் தவிர்க்கலாம். மக்கள் உணர்வுகளை மதிக்கவேண்டுமே தவிர புறக்கணிக்கக் கூடாது.
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக சமூகப் பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க ஒளிவுமறைவற்ற வகையில் நடவடிக்கைகள்அமைய வேண்டும் என்று கூறியுள்ளார் வாசன்.












Click it and Unblock the Notifications