சட்டசபைத் தேர்தலில் போட்டி: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி
திருச்செந்தூர்:
மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் நான் போட்டியிடுவேன். மலைவாழ் மக்களின் நலன்களுக்காகப் பாடுபடப் போகிறேன் என்றுசந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.
தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.வீரப்பன் உயிருடன் இருந்தபோது தனது மகள்களை மிகவும் ரகசியமாக படிக்க வைத்துக் கொண்டிருந்தார் முத்துலட்சுமி.வீரப்பன் இறந்த பிறகு தான் அவரது மகள்கள் எங்கு படிக்கிறார்கள் என்ற விவரம் தெரிந்தது. வீரப்பன் சாவுக்குப் பின்னர்முத்துலட்சுமி அமைதியாக இருந்து வருகிறார். அவரை அரசியலுக்கு இழுக்க ஆரம்பத்தில் சிலர் முயற்சி மேற்கொண்டனர்.ஆனால் அரசியலில் ஈடுபட முத்துலட்சுமி விருப்பம் தெரிவிக்கவில்லை.
இந் நிலையில் தான் அரசியலில் குதிக்கப் போவதாக முத்துலட்சமி கூறியுள்ளார். வருகிற சட்டசபைத் தேர்தலில் மேட்டூர்தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் முத்துலட்சுமி கூறுகிறார்.
அவர் கூறுகையில், நேற்று இருந்த நிலை இன்று இல்லை. எனது முடிவு தவறல்ல. எனது கணவர் உயிருடன் இருந்திருந்தால்நிச்சயம் வரவேற்றிருப்பார். மேட்டூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இதன் மூலம் மலைவாழ் மக்களின்நலன்களுக்காக நான் பாடுபடப் போகிறேன்.
எந்தக் குற்றமும் செய்யாமல் மலை வாழ் மக்கள் அதிரடிப்படையினராலும், போலீஸாராலும், வனத்துறையினராலும் அடிக்கடிகொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுக்கப் போகிறேன். இதன் மூலம் எனது கணவரின் கனவுகளைநான் நனவாக்குவேன்.
திமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து போட்டியிட விரும்புகிறேன். ஒருவேளை இந்தக் கட்சிகள்எனக்கு சீட் கொடுக்க மறுத்து விட்டால் சுயேச்சையாகப் போட்டியிடுவேன். சுயேச்சையாக நின்றாலும் நான் தான் ஜெயிப்பேன்.
வீரப்பனின் சக்தி யாருக்கும் சரியாகத் தெரியாது. என்னை எதிர்த்துப் போட்டியிட்டால் அவர்களுக்கு டெபாசிட் கூட மிஞ்சாதுஎன்று கூறுகிறார் முத்துலட்சுமி.
வீரப்பன் உயிருடன் இருந்தபோதே, அவனை பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்க்க முயற்சிகள் நடந்தன. பொது மன்னிப்புகேட்டு வீரப்பனை வெளியே கொண்டு வந்து அதன் பின்னர் பாமகவில் சேர்த்து ஒட்டுமொத்த மலை வாழ் மக்களின்ஓட்டுக்களையும் அப்படியே அள்ள பாமக தலைமை திட்டமிட்டது.
ஆனால் அதை திமுக தலைமை மறைமுகமாக தடுத்து விட்டதாக அப்போது கூறப்பட்டது. இந் நிலையில், வீரப்பனின் மனைவிதேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications