திமுக பேச்சாளர்களுடன் கருணாநிதி 14ம் தேதி ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைமைக் கழக பேச்சாளர்களுடன் கட்சித் தலைவர் கருணாநிதி வருகிற 14ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

சட்டசபைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்காகத்தயாராகி வருகின்றன. இதில் திமுக முன்னணியில் இருக்கிறது.

முதலில் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து அண்ணா அறிவாலயத்தில் வைத்து தினசரி ஆலோசனை நடத்தினார்கருணாநிதி. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சமீபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அடுத்தபடியாக தலைமைக் கழக பேச்சாளர்களுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார் கருணாநிதி. இதுதொடர்பாக திமுகபொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், கழக சொற்பொழிவாளர்கள் கூட்டம் வருகிற 14ம் தேதி காலை 10மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில் சொற்பொழிவாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒரு பக்கம் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திக் கொண்டே, திமுகவுக்கு சாதகமான தொகுதிகள், எத்தனை தொகுதிகளில்போட்டியிடலாம், கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளைக் கொடுப்பது என்ற ஆலோசனைகளிலும் கருணாநிதிதீவிரமாக இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

திருச்சியில் நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாட்டில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்தஉடன்பாட்டை அறிவிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+