ராஜகோபாலுக்கு எதிராக ஜீவஜோதி ஆக்ரோஷ சாட்சியம்
திருத்துறைப்பூண்டி:
சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு எதிராக திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஜீவஜோதி இன்று ஆக்ரோஷமாகசாட்சியம் அளித்தார்.
கடந்த 2003ம் ஆண்டு வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடியில் உள்ள ஜீவஜோதியின் வீட்டிலிருந்து அவரைராஜகோபால், அவரது வழக்கறிஞர் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்த முயன்றதாக திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ராஜகோபால்உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.கடந்த மாதம் 21ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜீவஜோதி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராகநீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து ஜீவஜோதி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி ராஜகோபாலுக்கு எதிராகசாட்சியம் அளித்தார்.
மிகவும் ஆவேசமாக பேசிய ஜீவஜோதி, எனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொடைக்கானலுக்குக் கடத்திக் கொண்டு போய்கொலை செய்தது ராஜகோபால் தான்.
இதுதொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் நான் அவருக்கு எதிராக சாட்சியம் சொல்லி விடக் கூடாதுஎன்பதற்காகத் தான் தனது வழக்கறிஞர் மற்றும் அடியாட்களுடன் சேர்ந்து அவர் காரில் என்னைக் கடத்திச் சென்றார் என்றுகூறினார் ஜீவஜோதி.
விசாரணையின் போது சரவண பவன் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications