மனைவியை சாமியாருக்கு விருந்தாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை:
சாமியாருக்கு தனது மனைவியை விருந்தாக்கிய கணவருக்கும், அந்த சாமியாருக்கும் சென்னை மகளிர் நீதிமன்றம் தலா 10ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
சென்னை சின்மயா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது நண்பர் சுரேஷ்குமார் என்ற பகவான் ஸ்ரீசுரேஷ்வர். இவர் ஒருசாமியார். இவரைக் கேட்டுத் தான் சிவக்குமார் எதையும் செய்வார். அவர் என்ன சொன்னாலும் சிவக்குமார் தட்ட மாட்டாராம்.இந் நிலையில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிவக்குமாருக்கு தனது பக்தர் ஒருவரின் மகளை திருமணம் செய்துவைத்தார் சுரேஷ்குமார். அதற்கு முன்பாக நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று கூறி அந்தப் பெண்ணை தனியாகஅழைத்து பூஜை நடத்தியுள்ளார்.
பின்னர் கட்டாயமாக அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது தந்தையிடம்இதுகுறித்துக் கூறியுள்ளார். அவரும் இதுகுறித்து சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, சுரேஷ்குமாரும், சிவக்குமாரும் சேர்ந்துகத்தியைக் காட்டி பெண்ணின் தந்தையை மிரட்டி, இதுகுறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று கூறியுள்ளனர்.
பின்னர் 68 பவுன் நகைகள் மற்றும் சொத்துப் பத்திரங்களையும் மிரட்டி வாங்கிக் கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும்சுரேஷ்குமார், சிவக்குமாரின் மனைவியை பலமுறை மிரட்டி உறவு கொண்டுள்ளார். சிவக்குமாரே, இதற்கான ஏற்பாடுகளைசெய்து கொடுப்பாராம்.
இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாத சிவக்குமாரின் மனைவி தனது தாயாரிடம் கூற, அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிவக்குமாரும், சுரேஷ்குமாரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், இருவருக்கும்தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 53,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அபராதப் பணத்தைபாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications