கஞ்சா: மதுரை நீதிமன்றத்தில் செரீனா ஆஜர்
மதுரை:
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மதுரை போதைப் பொருள் நீதிமன்றத்தில் செரீனா, அவரது தாயார்ஷெரீஜா ஆகியோர் இன்று ஆஜரானார்கள்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செரீனா, அவரது தாயார் ஷெரீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோரை கருப்பாயூரணிபோலீஸார் கைது செய்தனர். அவர்களது காரில் கஞ்சா இருந்ததாக கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந் நிலையில் இவ்வழக்கைவிசாரித்து வந்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை பாதிக்கப்பட்டது. வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றஅரசுத் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்த செரீனா, வழக்கை வேறு நீதிமன்றத்தில்விசாரிக்கக் கூடாது. புதிய நீதிபதி நியமிக்கப்படும் வரை வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
அதன்படி மதுரை நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. இந் நிலையில் போதைப்பொருள் நீதிமன்றத்திற்குமாணிக்கம் என்பவர் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டஇடைக்காலத் தடையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி போலீஸார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி புதன்கிழமைஉத்தரவிட்டார். இதையடுத்து இன்று செரீனா உள்ளிட்டோர் போதைப்பொருள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.பின்னர் வழக்கை வருகிற 18ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications