அரசுப் பணிகளுக்கு மீண்டும் ஆளெடுப்பு?
சென்னை:
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்களைத் தேர்வுசெய்ய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடவுள்ளார்.
முதல் கட்டமாக காவல்துறை மற்றும் நீதித்துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அரசுப் பணிகளுக்கு ஆளெடுப்பதை நிறுத்திவைத்தது. இதனால், அரசுப் பணிகளுக்கான தேர்வை நடத்தி வந்த தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் முடங்கிப்போனது.
ஒரு தேர்வும் நடத்தப்படாமல் தேர்வாணைய ஊழியர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். அரசு வேலைகளுக்குஆளெடுப்பது நிறுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசு வேலையில் சேரமுடியாமல் தவித்து வந்தனர்.
இந் நிலையில் சட்டசபைத் தேர்தல் வந்து கொண்டிருப்பதால், அரசின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகளைஜெயலலிதா வாரி வழங்கிக் கொண்டிருப்பதைப் போல, தற்போது அரசுப் பணிகளுக்கு மீண்டும் ஆளெடுக்கவும் அவர் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் காவல்துறையில்காலியாக உள்ள 228 பணியிடங்கள் மற்றும் நீதித்துறையில் காலியாக உள்ள 112 ஸ்டெனோ பணியிடங்களுக்கு ஆட்களைநிரப்ப எழுத்துத் தேர்வுக்கு ஏற்பாடு செய்யுமாறும் கூறப்பட்டுள்ளது.
இந்த இரு துறைகளையும் தொடர்ந்து மற்ற துறைகளில் உள்ள காலியிடங்களுக்கும் ஆட்களை தேர்வு செய்ய தமிழக அரசுமுடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் முதல்வர் ஜெயலலிதாவால் வெளியிடப்படும்எனத் தெரிகிறது.
கடந்த நான்கு ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பணிகளுக்க ஆளெடுக்கும் பணி மீண்டும்தொடங்கவுள்ளதால் வேலையின்றித் தவித்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications