நாளை கூட்டணித் தலைவர்ளுடன் கருணாநிதி முக்கிய ஆலோசனை
சென்னை:
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் சென்னையில் நாளைநடைபெறுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் திமுக மிகமும்முரமாக இறங்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன்தொகுதிப் பங்கீடு குறித்துக் கூட திக தலைவர் கருணாநிதி ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை ரகசியமாக முடித்து விட்டதாகக்கூறப்படுகிறது.இந் நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கருணாநிதி நாளை கூட்டியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில்நடைபெறும் இக் கூட்டத்திற்கு கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச் செயலாளர்வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்நல்லகண்ணு உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
சட்டசபைத் தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கியமாக இக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் குறித்தும் பேசப்படவுள்ளது. இதை விட முக்கியமாக தொகுதிப் பங்கீடூ, கூட்டணிக் கட்சிகளுக்குச் சாதகமானசட்டசபைத் தொகுதிகள் ஆகியவை குறித்து பேசப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா தினசரி அறிவித்து வரும் பல்வேறு சலுகைகளும், அறிவிப்புகளும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளவிளைவுகள் குறித்தும், அதை எப்படி எதிர்கொண்டு சமாளிப்பது என்பது குறித்தும் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications