நியூயார்க்- மும்பை ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா:
நியூயார்க்கில் இருந்து மும்பை வந்து கொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அது கொல்கத்தாவிமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியாவின் ஏர் பஸ் 310 ரக விமானம் 130 பயணிகளுடன் நியூயார்க்கில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை செல்லஇருந்தது. ஆனால், கொல்கத்தா என்.எஸ்.சி. போஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய அந்த விமானத்தில் கோளாறுஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டது. அதிலிருந்த பயணிகள் வேறு ஒரு விமானம் மூலம் மும்பைஅழைத்துச் செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications