மத்திய சிறையில் ஆதி, ஐடியல் உருக்கமான சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை ஆதிகேசவனும், கொடைக்கானல்ஐடியல் சுப்ரமணியமும் சென்னை மத்திய சிறையில் சந்தித்து பரஸ்பரம் விசாரித்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆதிகேசவன், வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறிநூற்றுக்கணக்கான பேரிடம் பல கோடி ரூபாய்களை மோசடி செய்ததாக கைதாகியுள்ளார். அவருடன் அவரது மகனும்கைதாகியுள்ளார். இருவரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆதி கேசவன் பாணியில் கொடைக்கானலை மையமாக வைத்து பல கோடி ரூபாய்ககைள ஸ்வாஹா செய்து கைதாகியுள்ளார்ஐடியல் சுப்ரமணியம். இதில் வேடிக்கை என்னவென்றால் ஆதியைப் போலவே உருவத்தில் உள்ளார் ஐடியல் சுப்ரமணியம்.இருவரும் செய்தது ஒரே மாதிரியான மோசடி செயல்கள்.

சமீபத்தில் கைதான ஐடியல் சுப்ரமணியம், சென்னை மத்திய சிறையில் 2 நாட்களுக்கு அடைக்கப்பட்டிருந்தார். அப்போதுஐடியலை சந்தித்துப் பேசியுள்ளார் ஆதி. செய்தித்தாள்களில் ஐடியலின் மோசடி குறித்து வெளியான செய்திகளைப் படித்து வந்தஆதிக்கு, ஐடியல் நம்மைப் போலவே மோசடி செய்திருக்கிறாரே என்று வியப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டது. அதோடு உருவஒற்றுமையும் அவரைக் கவர்ந்து விட்டது.

இந் நிலையில் தான் அடைக்கப்பட்டுள்ள அதே சிறையில் ஐடியலும் அடைக்கப்பட்டுள்ளதை அறிந்த ஆதி, அவரை சந்திக்கவிருப்பம் கொண்டு அவரை போய்ப் பார்த்திருக்கிறார். அது ஒரு உருக்கமான சந்திப்பாக அமைந்ததாம்.

நீ என்னப்பா என்னை விட பெரிய ஆளா இருப்பே போலிருக்கே என்று ஐடியலிடம் ஆதி கேட்டுள்ளார். இதைக் கேட்டதும்புன்னகையுடன், இல்லை அண்ணே, அதெல்லாம் இல்லை. பத்திரிக்கைகளில் தான் அப்படிப் போட்டு வருகிறார்கள். நான்ஒங்களை விட ரொம்ப சின்ன ஆள் தான் என்று கூறியுள்ளார் ஐடியல்.

இரு மோசடி மன்னர்களும் பேசிக் கொண்டதை மற்ற கைதிகள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனராம். இதற்கிடையே,விசாரணைக்காக ஐடியல் சுப்ரமணியத்தை போலீஸார் தற்போது வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டிக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்குள்ள ஐடியலின் ஆடம்பர பங்களாவில் வைத்து விசாரணை நடக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+