ஐ.நா கூட்டம்: அமெரிக்கா வர இரான் அதிபருக்கு புஷ் அனுமதி
கிராபோர்ட்:
இரானின் புதிய அதிபர் மெக்மூத் அகமத்நிஜாத் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார் என அதிபர்ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாகவே அமெரிக்கா-இரான் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 1979ல் நடந்த இரான்புரட்சியின்போது அமெரிக்கத் தூதரகம் சூறையாடப்பட்டு, பல அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் சிறை பிடிக்கப்பட்டனர். சிலர்கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தொடர்ந்து வருகிறது.சமீபத்தில் அமெரிக்காவின் அச்சுறுத்தலையும் மீறி தனது அணு ஆராய்ச்சி நிலையத்தை இரான் மீண்டும் செயல்பாட்டுக்குக்கொண்டு வந்தது.
இந் நிலையில் சமீபத்திய இரான் தேர்தலில் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளரான மெக்மூத் அகமத்நிஜாத் வெற்றி பெற்றுஜனாதிபதியானார். தெஹ்ரானில் அமெரிக்கத் தூதரகத்தை சிறை பிடித்து, தாக்கியவர்களில் நிஜாத் முக்கிய பங்காற்றியதாகக்குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஐ.நாவின் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற அகமத்நிஜாத் அமெரிக்கா வரத் திட்டமிட்டுள்ளார்.அவருக்கு அமெரிக்கா வர அனுமதி கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவி வந்தது.
இந் நிலையில், அகமத்நிஜாத் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அதே நேரத்தில் அவர் ஐ.நா.கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வர அனுமதிக்கப்படுவார் என்றும் அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
இதற்கிடையே தனது அணு ஆராய்ச்சிகளை இரான் உடனடியாகக் கைவிட வேண்டும் என ஐ.நாவின் அணு ஆயுதத் தடுப்புஅமைப்பும், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தத் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க இரான் மறுத்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications