ஜெயலட்சுமி: இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்கு எதிரான உத்தரவு ரத்து
மதுரை:
ஜெயலட்சுமி வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தனது அரசு வீட்டைக் காலிசெய்யுமாறு மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.
ஜெயலட்சுமி விவகாரத்தில் அடிபட்ட இளங்கோவன், அவரது குடும்பத்தினரைக் கடத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில்விடுதலையானார். இந்த வழக்கைத் தொடர்ந்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இவர் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் கடைசியாக வேலை பார்த்து வந்தார். தற்போது குடும்பத்துடன் கிரைம் பிராஞ்ச்காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். ஜெயலட்சுமி விவகாரத்தையடுத்து அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டபின்னர், உடனடியாக அரசு வழங்கிய வீட்டைக் காலி செய்யுமாறு கூறி மதுரை காவல்துறை ஆணையர் இளங்கோவனுக்குநோட்டீஸ் அனுப்பினார்.
இதை எதிர்த்து இளங்கோவன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை காவல்துறைஆணையரின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியிருந்தார்.
இளங்கோவன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் காந்தி மற்றும் அஜ்மல் கான் இருவரும், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கள்இதுவரை எந்த நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்படவில்லை, நிரூபிக்கப்படவில்லை.
இந் நிலையில் மனுதாரரை வீட்டைக் காலி செய்யுமாறு அரசு கூறுவது விதிமுறைகளுக்குப் புறம்பானதாகும் என்று வாதாடினர்.அவர்களது வாதத்தைக் கேட்ட நீதிபதி ஏ.குலசேகரன், மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறுமாறுகூறி உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications