தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை:
தனியார் துறையிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படவுள்ள சட்டத் திருத்த மசோதாவில் தனியார் துறை இட ஒதுக்கீட்டுக்கும் வழி வகை செய்ய வேண்டும்.
அதே போல மத்திய அரசுப் பணிகளில் உயர் வருமானம் கொண்ட பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றவிதியையும் ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசின் நிதி உதவியோடு நடக்கும் ஐ.ஐஎம்., ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பக் கல்விநிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும்.
மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கு என தனி நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும்.
மக்கள் தொகை விகிதப்படி கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அந்தந்தமாநிலங்களே தேவையான அளவு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்த தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கமிட்டியின் தலைவர் சுதர்சன நாச்சியப்பன்தங்களிடம் (பிரதமரிடம்) தந்துள்ள அறிக்கையைப் படித்தேன். அதில் உள்ள அம்சங்கள் எனக்கு பூரண திருப்தியைத்தந்துள்ளது. அந்த அறிக்கையை உடனடியாக அமலாக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications