சென்னைக்கு கிருஷ்ணா நீர்: ஆந்திரா உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகருக்கு விரைவில் கிருஷ்ணா நதி நீர் திறந்து விடப்படும் என ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டி கூறியுள்ளார்.
சென்னையில் அகில இந்திய தெலுங்கு சம்மேளன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராஜசேகர் ரெட்டி இன்று காலைசென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,ஆந்திராவில் நல்ல மழை பெய்துள்ளதால் போதுமான தண்ணீர் உள்ளது. எனவே கிருஷ்ணா நீரைத் திறந்து விடுவதில்பிரச்சினை இல்லை.
கிருஷ்ணா நதி நீர்த் திட்ட கால்வாய்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. அந்தப் பணி முடிவடைந்ததும் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார் ராஜசேகர் ரெட்டி.
இந்தப் பிரச்சினை தொடர்பாக, ராஜசேகர் ரெட்டியை, தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவும்சந்தித்துப் பேசவுள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications