புகை மூட்டத்தில் திண்டாடும் மலேசியா
கோலாலம்பூர்:
இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள பெரும் காட்டுத் தீயினால் மலேசியாவின் பல பகுதிகள் புகை மூட்டத்தால்மூடப்பட்டுள்ளன. இதையடுத்து மலேசியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர கால நிலை அமலாக்கப்பட்டுள்ளது.
![]() |
| புகை மூட்டத்துக்கு முன், புகை மூட்டத்துக்குப் பின் |
சுமத்ரா தீவில் காட்டுப் பகுதிகளை அழித்து நிலத்தை சமப்படுத்த தீ வைக்கப்பட்டது. இதற்காக காட்டுப் பகுதிகளில் 100இடங்களில் தீ வைக்கப்பட்டது. இந்தத் தீ கட்டுக்கடங்காமல் எரிய ஆரம்பித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக பல ஆயிரம் ஹெக்டேர் பகுதியில் இந்தக் காட்டுத் தீ எரிந்து வருகிறது.
இதனால் மலேசியாவின் போர்ட் கலாங், கோலா செலாங்கூர் உள்பட பல பகுதிகளிலும் புகை மூட்டம் பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
இப் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து இந்தப் பகுதிகளில் அவசர கால நிலையை பிரதமர் அப்துல்லா படாவி அறிவித்துள்ளார்.
இந் நிலையில் மலேசியாவிலும் இந்தோனேஷியாவிலும் மேகங்களில் ரசாயனத்தைத் தூவி மழையைப் பெய்ய வைக்கவும்,இதன் மூலம் தீயையும் புகையையும் கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications