பிரமோஸுக்கு போட்டி ஏவுகணை: பாக் சோதனை
இஸ்லாமாபாத்:
இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைக்கு இணையாகக் கருதப்படும் ஹத்ப்-7 பாபுர் என்ற ஏவுகணையை பாகிஸ்தான் ஏவிசோதனை நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் முஷாரபின் 62வது பிறந்த நாளையொட்டி இந்த ஏவுகணையை பாகிஸ்தான் ஏவியது.அணு குண்டுகளைத் ஏந்திக் கொண்டு 500 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை.
கண்டம் விட்டுக் கண்டம் தாவும் அதிக தூர ஏவுகணைகளைப் போலில்லாமல் இந்த ஏவுகணை மிகக் குறுகிய தூரமே சென்றுதாக்கும். ஆனால், அதிவேகத்தில் சென்று தாக்கும் குரூயிஸ் மிசைல் ரகத்தைச் சேர்ந்த ஏவுகணை இது.
மேலும் இந்தியாவுக்கு பேட்ரியாட் ரக ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கவுள்ள நிலையில், ஹத்ப்-7பாபுர் ஏவுகணையை பாகிஸ்தான் ஏவி சோதனை நடத்தியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஏவுகணையை வழி மறித்துத் தாக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரம்மோஸ் ஏவுகணை 300 கி.மீ. தூரம் வரையே பாயும் திறன் கொண்டது என்ற நிலையில் 500 கி.மீ. தூரம் செல்லும்குரூயிஸ் ரக ஏவுகணையை பாகிஸ்தான் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணை சோதனை குறித்து இந்தியாவிடம் பாகிஸ்தான் முன் கூட்டியே தெரிவிக்கவில்லை. அதிக தூரம் சென்று தாக்கும்ஏவுகணை சோதனை குறித்தே இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்ள ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளது.
பிரமோஸ் ரக ஏவுகணையின் தூரத்தையும் சக்தியையும் அதிகரிக்க இந்தியாவும்-ரஷ்யாவும் கூட்டாக ஆய்வுகள் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications