என்கெளண்டர் கொலை: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை
சென்னை:
சேலம் அருகே ஒமலூரில் பிரபல ரவுடி கர்ணன் என்கெண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைநடத்த உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு, டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவன் கர்ணன். பல்வேறு கொலை, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்துக்களில்தொடர்புடையவன். கடந்த ஆண்டு போலீஸார் இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸ்பிடியிலிருந்து தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் கர்ணனை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.ஆனால் தனது கணவரை அப்போதைய சேலம் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன் மாணிக்கவேலும், உயரதிகாரிகளும்சேர்ந்து வேண்டும் என்றே திட்டமிட்டுக் கொலை செய்து விட்டனர். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி கர்ணனின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன், கர்ணனின் சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இந் நிலையில்தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் முன்பு அரசுத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications