டைட்லர் விலகியதால் சிக்கலில் நரேந்திர மோடி
சென்னை:
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைத் தூண்டியதாக நானாவதி கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லர் தனதுஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் போல குஜராத் கலவரத்தை முன் நின்று நடத்திய பாஜக முதல்வர் நரேந்திரமோடியும் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
நானாவதி கமிஷன் அறிக்கையை வைத்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரச்சனை கிளப்பியதையடுத்துடைட்லர் தனது பதவியை ராஜினா செய்தார். கம்யூனிஸ்ட் கட்சிகளின் நெருக்குதல் காரணமாக உடனே பதவி விலக வேண்டியநிலைக்கு வந்தார் டைட்லர்.இந்த விஷயத்தை வைத்து அரசியல் லாபம் அடைய நினைத்த பாஜக இப்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.
டைட்லர் விலகியதைப் போல மோடியும் விலக வேண்டும் என குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. குஜராத்தில் கலவரத்தைமுன்னின்று நடத்திய மோடிக்கு எதிராக தேசிய அளவில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
டைட்லரின் ராஜினாமா மூலம் காங்கிரஸ் தனது அரசியல் நேர்மையை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் ஒருபுதிய முன் உதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல நியாயத்தை விரும்புபவர்கள் நரேந்திர மோடியையும் பதவி விலகச்சொல்ல வேண்டும் என்றார்.
அதே போல மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதி பாசு உள்ளிட்ட இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் மோடியின் ராஜினாமவைக்கோரியுள்ளனர்.
கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய அவர், டைட்லர் ராஜினாமா செய்தது திருப்தியளிக்கிறது. ஆனால், குஜராத்தில்ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்களை திட்டமிட்டு கொலை செய்த நரேந்திர மோடி இப்போதும் பதவியில் ஒட்டிக் கொண்டுதிரிவது ஆச்சரியம் தருகிறது. அந்தக் கொலைகளுக்கும் மோடிக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது அனைவருக்கும் தெரியும்.
மோடியை முதலில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். முதல் கட்டமாக அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்றார்.
அடுத்த வாரம் நரேந்திர மோடி பிரச்சனையை நாடாளுமன்றத்தில் கிளப்பப் போவதாக சிபிஎம் எம்பியான பாசுதேப் ஆச்சாரியாகூறியுள்ளார்.
இதற்கிடையே இன்று சென்னை வந்த ஜெகதீஷ் டைட்லர் நிருபர்களிடம் பேசுகையில்,
என் மீது தவறே இல்லை. இருந்தாலும் காங்கிரஸ் நலனுக்காக நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன். அதே நேரத்தில்சீக்கிய மக்கள் தான் என்னை எம்.பியாக தேர்வு செய்தனர். அந்தப் பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications