கோட்டை அமீர் கொலை: அல்-உம்மாவினருக்கு ஆயுள் தண்டனை ரத்து
சென்னை:
கோவையைச் சேர்ந்த கோட்டை அமீர் படுகொலை வழக்கில், அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷாவின் மகன் உள்ளிட்ட 4பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு வந்தவர் கோட்டை அமீர். கோவை மாவட்ட அமைதிக் குழுவின்உறுப்பினராகவும், சிறுபான்மைப் பிரிவு என்ற அமைப்பின் அமைப்பாளராகவும் இருந்து வந்தார் அமீர்.கோவை குண்டுவெடிப்புக் கலவரத்திற்குப் பிறகு அல் உம்மாவினரின் செயல்பாடுகளைக் கடுமையாக சாடிப் பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார் அமீர். மேலும், பாட்சா என்ற தனி மனிதரை நம்பி இஸ்லாமிய சமுதாயத்தினர் இருக்கக் கூடாதுஎன்றும் அவர் பேசி வந்ததால் அல் உம்மா அமைப்பினர் அமீர் மீது கோபம் கொண்டனர்.
இந் நிலையில் கடந்த 1994ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி கோணியம்மன் கோவில் திருவிழாவின்போது கோட்டை அமீருக்குநெற்றியில் குங்குமம் வைத்து விழா ஏற்பாட்டாளர்கள் கெளரவித்தனர். இதற்கு அல் உம்மாவினர் கடும் கண்டனம்தெரிவித்திருந்தனர்.
இந்தத் திருவிழா நடந்த 15 நாட்களுக்குப் பிறகு தனது நண்பர் ஒருவருடன் டவுன்ஹால் பகுதியில் சைக்கிளில் அமீர் சென்றுகொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக குத்திக் கொலை செய்தனர்.
இந்த படுகொலை தொடர்பாக அல் உம்மா அமைப்பின் தலைவர் பாட்சாவின் மகன் சித்திக் அலி, சாகுல் ஹமீது, முகம்மதுமுத்து, முகம்மது ஷபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவை 2வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்குவிசாரிக்கப்பட்டது. இறுதியில் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 பேரும் மேல் முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள்கற்பகவிநாயகம், சர்தார் சக்காரியா உசேன் ஆகியோர், நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றிநிரூபிக்கப்படவில்லை. எனவே ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications