கொலையில் துளியும் தொடர்பில்லை: புலிகள் மறுப்பு
கொழும்பு:
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கொலைக்கு அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுள்ள ஆட்சியாளர்களே காரணம் எனவிடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் துளியும் தொடர்பில்லை என அவர்கள்திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான தமிழ்ச்செல்வன் தமிழ்நெட் இணையத் தளத்தில் கூறியுள்ளதாவது:
கதிர்காமரின் கொலைப் பழியை அவரச, அவசரமாக புலிகள் மீது இலங்கை அரசு போடுவதை மிகக் கடுமையாகக்கண்டிக்கிறோம். இந்தக் கொலைக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நார்வே மூலமான அமைதிப் பேச்சுவார்த்தையை சீர் குலைக்க இலங்கை அரசுக்குள்ளேயே சில சக்திகள் தீவிரமாக முயன்றுவருகின்றன.
ஆட்சியில் உள்ளவர்களுக்கு இடையே ஏகத்துக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றும்முயற்சியில் அவர்களுக்கு இடையே உள் பகையும் மோதலும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதனால் இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் அவர்களுக்குள் தான் இருக்கிறார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதிர்க்கும்சக்திகள் நாட்டின் தென் பகுதியில் ஏராளமாக உள்ளன.
மேலும் இலங்கை ராணுவத்தின் ஒரு பிரிவே கூட போர் நிறுத்த உடன்பாட்டை சீர்குலைக்கும் சதித் திட்டத்துடன் செயல்பட்டுவருகின்றன.
இதனால் இந்தக் கொலைக்குக் காரணமாகவர்களைக் கண்டுபிடிக்க முழுமையான, நியாயமான விசாரணையை இலங்கை அரசுநடத்த வேண்டும். எந்தக் கொலை நடந்தாலும் உடனே புலிகளைக் குற்றம் சாட்டும் போக்கு நாட்டின் தென் பகுதியில்உள்ளவர்கள் (சிங்களர்கள்) மத்தியில் அதிரித்து வருகிறது என்றார் தமிழ்ச்செல்வன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications