சுதந்திர தினம்: தமிழகம் உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
டெல்லி- சென்னை:
சுதந்திர தினத்தையொட்டி சென்னை, டெல்லி உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சென்னையில் 10,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் 59வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்நாளை காலை 7.30 மணியளவில் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார். சென்னை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாகொடியேற்றுகிறார்.சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் சென்னை, டெல்லி, பெங்களூர்உட்பட முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்கள், முக்கிய கோவில்கள்மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் வடபழனி முருகன் கோவில், மைலாப்பூர், திருவான்மியூர், திருவேற்காடு, குன்றத்தூர் மற்றும் பழனி,திருச்செந்தூர், ராமேஸ்வரம் உட்பட அனைத்து முக்கிய கோவில்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை சென்டிரல், எழும்பூர், கோவை, சேலம், மதுரை உட்பட அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும்போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகேஅனுமதிக்கப்படுகின்றனர்.
இதே போல தலைநகர் டெல்லி, பெங்களூர் உட்பட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பக்கத்து மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சீல்வைக்கப்பட்டன.
இதனால் டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இன்று இரவு 10மணி முதல் நாளை காலை 10 மணி வரை செங்கோட்டையை நோக்கி செல்லும் முக்கிய சாலைகளில் தகுந்த அத்தாட்சிஇல்லாமல் யாருக்கும் செல்ல முடியாது.
செங்கோட்டை பகுதி முழுவதும் இப்போது பாதுகாப்புப் படையினரின் கைவசம் உள்ளது. விழா நடைபெறும் பகுதியில்ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிக்கப்படும். நாளை காலை 6 மணி முதல் விழா முடியும் வரை செங்கோட்டையின் மேலும்,விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் பகுதியிலும் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, சென்னைக்கு அடுத்தபடியாக தீவிரவாதிகளின் பட்டியலில் பெங்களூர் நகரமும் இருக்கிறது. இதனால் பெங்களூரில்அனைத்து முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரில் சுமார் 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications