தேர்தலை சந்திக்க எப்போதும் தயார்: திமுக
வேலூர்:
சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதைச் சந்திக்க திமுக கூட்டணிக் கட்சிகள் தயாராகவே உள்ளன என்று திமுகதுணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேலூரில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் திமுக மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைப்பார்வையிடுவதற்காக ஸ்டாலின் வேலூர் வந்தார்.மாநாட்டுப் பந்தலையும், மேடையையும் சுற்றிப் பார்த்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டசபைத்தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கத் தயார்.
சட்டசபைத் தேர்தலை திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் வலுவுடன் சந்திக்கும்.கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, கூட்டணி மாறும் என்று தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால்கூட்டணியில் எந்தவித மாற்றமும் இருக்காது.
காவிரிப் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜெயலலிதா போய்ப் பார்த்தது அரசியல் நாடகம். காவிரிப் பிரச்சினையைஅரசியலாக்கிவிட்டார் ஜெயலலிதா என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications